சர்க்கரை நோய்க்கு இன்சுலின் எடுப்பது தொடர்பாக, மருத்துவரிடம் காணொலி மூலம் ஆலோசனை பெற அனுமதிக்க வேண்டும் என்ற கெஜ்ரிவாலின் கோரிக்கையை டெல்லி சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சர்க்கரை நோயாளியான தனக்கு, மருத்துவரிடம் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் தேவையான ஆலோசனை பெற தினமும் 15 நிமிடங்கள் அனுமதிக்க வேண்டும் என டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரித்தார்.
மேலும் திஹார் சிறைத்துறை நிர்வாகம், கெஜ்ரிவாலுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இன்சுலின் வழங்குவது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவக் குழு முடிவு செய்யும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கக்கோரி சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் தொடர்ந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறியதுடன், மனுதாரருக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது என்பது குறிப்பிடதக்கது.
+ There are no comments
Add yours