புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைகள் வழக்கம் போல நாளை வழங்கப்படும் என்று ஜிப்மர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் குழந்தை ராமா் சிலை பிரதிஷ்டை நாளை(திங்கள்கிழமை) நடைபெறுகிறது. இந்த கோலாகல நிகழ்வில் பிரதமா் நரேந்திர மோடி உள்பட 8,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினா்கள் பங்கேற்க உள்ளனா். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இதையொட்டி, ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜிப்மரில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பரிசோதனைகளை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நாளை திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் ஏதும் இல்லை எனவும் இருப்பினும் அவசர சிகிச்சைகள் வழக்கம் போல நாளை வழங்கப்படும் எனவும் ஜிப்மர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஜிப்மர் விளக்கத்தை ஏற்று மருத்துவமனையை மூட தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது
+ There are no comments
Add yours