ஆளுநரின் மாண்பு காக்கப்பட வேண்டும், தாக்கப்படக் கூடாது… தமிழிசை செளந்தரராஜன் கண்டனம்!

Spread the love

தமிழக ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பாகி வரும் நிலையில், இதற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு வீசிய நபரை அங்கிருந்த போலீஸார் துரத்திப் பிடித்தனர். இதில் அவர் பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பது தெரியவந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக ஆளுநருக்கு எதிராக வார்த்தை வன்முறைகளும், செயல் வன்முறைகளும் சமீபகாலமாக ஆளுங்கட்சி ஆதரவாளர்களால் ஊக்கப்படுத்தப்படுவது கவலை அளிக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இது ஜனநாயகத்துக்கு ஏற்புடயைது அல்ல.

கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, கலவரத்தால் அல்ல.. இதை தமிழக அரசு உடனே கட்டுப்படுத்த வேண்டும். ஆளுநரின் மாண்பும், ஆளுநர் மாளிகையின் மாண்பும் காக்கப்பட வேண்டுமே தவிர, தாக்கப்படக்கூடாது என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்” என தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours