மேற்கு வங்க மாநிலத்தில் இந்திய விமானப்படையின் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில், விமானிகள்இருவர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
மேற்குவங்க மாநிலம் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான கலைக்குந்தாவிமான தளம் அமைந்துள்ளது. இங்கிருந்து பயிற்சி விமானிகளுக்கு போர் விமானங்களை ஓட்டுவதற்கான பயிற்சிஅளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று மதியம் ஹாக் ட்ரெயினர் வகை விமானம் ஒன்று பயிற்சி விமானிமற்றும் பயிற்சியாளருடன், மதியம் 3 மணியளவில் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போதுதிடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், டயாசா பகுதியில் உள்ள வேளாண் நிலம் ஒன்றில் மதியம்3:35 மணி அளவில் விழுந்து நொறுங்கி விபத்திற்கு உள்ளானது. இதில் விமான முற்றிலும் சேதம் அடைந்தது. இருப்பினும் இந்த விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளும் தக்க நேரத்தில் விமானத்திலிருந்து வெளியேறிபாராசூட் மூலம் பத்திரமாக தரையிறங்கினர்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் இந்திய விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் சம்பவஇடத்திற்கு விரைந்து வந்து விமானிகளை பத்திரமாக மீட்டு விமானப்படைத்தளத்திற்கு அழைத்துச் சென்றன. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக விமானப்படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்தியவிமானப்படை தெரிவித்துள்ளது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் விமானிகளும், தரையில் இருந்த பொதுமக்களும்பத்திரமாக உயிர் தப்பினர்.
+ There are no comments
Add yours