குடிநீர் வீணாவதை தடுக்கும் வகையில், வந்தே பாரத் ரயிலில் செல்லும் பயணிகளுக்கு வழங்கப்படும் தண்ணீர் பாட்டிலின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு இனிமேல் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால், கூடுதலாக மற்றொரு 500 மி.லி. தண்ணீர் பாட்டிலை பணம் செலுத்தாமல் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குடிநீர் வீணாவதை தடுக்கும் வகையில் 1லிட்டர் தண்ணீர் பாட்டிலிலிருந்து அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலாகக் குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், வந்தே பாரத் ரயில்களில் பயணிகள் நீண்ட தூரம் பயணங்கள் மேற்கொள்ளவில்லை என்பதாலும் தண்ணீர் குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதேப்போன்று, கடந்த 2019 ஆம் ஆண்டு சதாப்தி ரயில்களில் தண்ணீர் பாட்டிலின் அளவு 1 லிட்டரிலிருந்து அரை லிட்டராக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours