இமாச்சல் பிரதேசத்தில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

Spread the love

இரவு 9.34 மணியளவில் இமாச்சல் பிரதேசத்தில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள சம்பா நகரில் இன்றிரவு 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சம்பா நகரம் முழுவதும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும் சம்பாவில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள மணாலியிலும் வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது. உடனடியாக சேதம் குறித்தான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

ஆனால் இரவில் நிலநடுக்கம் எழுந்ததால் மக்கள் தங்கள் வீடுகளின் உள்ளாக தங்கவும், உறங்கவும் தயங்கி வருகின்றனர். மீண்டும் நிலநடுக்கம் வருமா, ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது அது விபரீதங்களுக்கு வழிவகுக்குமா என்ற அச்சமும் அவர்களை பாதித்துள்ளது. ஆனால் அஞ்சக்கூடிய அளவிலான நிலநடுக்கம் அமையவில்லை என்றும், மிகச்சில விநாடிகள் மட்டுமே நிலநடுக்கம் நீடித்ததாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக தைவான் மற்றும் ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கங்களுக்கு மத்தியில் இமாச்சல் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளாது. இமாச்சல் பிரதேசத்தின் சம்பா நில நடுக்கம் இரவு 9:34 மணியளவில், நிலத்தடியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் தாக்கியதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மணாலியில் உணரப்பட்ட நிலநடுக்க்கத்தை மக்கள் சமூக ஊடகங்களில் உறுதி செய்து வருகின்றனர். எனினும் இமாச்சல் நிலநடுக்கம் குறித்தான முழுமையான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours