ஈத்கா மசூதியில் தொல்லியல் ஆய்வுக்கு தடை!

Spread the love

மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமி கோயிலுக்கு அருகிலுள்ள ஷாஹி ஈத்கா மசூதியில் தொல்லியல் ஆய்வு செய்ய அனுமதித்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று தடை விதித்தது.

உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் கிருஷ்ணர் பிறந்ததாக கூறப்படும் இடத்தின் அருகே ஷாஹி ஈத்கா மசூதி உள்ளது. இந்த மசூதி கிருஷ்ண ஜென்ம பூமி இடத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து தொல்லியல் துறை ஆய்வுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரி, இந்து அமைப்பினர் மதுரா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

பின்னர் இந்த விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஹரி சங்கர் ஜெயின் மற்றும் பலர் பகவான் ஸ்ரீ கிருஷ்ண விராஜ்மான் சார்பில தாக்கல் செய்த மனுவில், கிருஷ்ணர் பிறந்த இடத்தின் ஒரு பகுதியை இடித்து முகலாய பேரரசர் அவுரங்கசீப் ஷாஹி ஈத்கா மசூதியை கட்டியதாகவும், அங்குள்ள 13.37 ஏக்கர் நிலத்தின் மீதும் உரிமை கோரினர்.

இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், ஷாஹி ஈத்கா மசூதியில் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ், தொல்லியல் துறை அறிவியல் பூர்வ ஆய்வு நடத்த கடந்த டிசம்பர் 14-ம் தேதி அனுமதி வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து, ஷாஹி ஈத்கா மசூதி நிர்வாகத்தினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், “அலகாபாத் உயர் நீதிமன்றம் டிசம்பர் 14 அன்று வெளியிட்ட, ஷாஹி ஈத்கா மசூதியை ஆய்வு செய்யும் உத்தரவுக்கு தடை விதித்தனர். இருப்பினும், அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்த மற்ற நடவடிக்கைகள் தொடரும்” என தெளிவுபடுத்தியுள்ளனர்.

முன்னதாக, இந்து மத தரப்பு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், ஆஜராகி, தொல்லியல் துறை ஆய்வுக்கு தடை விதிக்க கூடாது என வாதிட்டார். ஆனால், அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours