உத்தரகண்ட் , உத்தர்காசியில் சில்கியாரா சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் 17வது நாளாக நடைபெற்று வருகிறது. சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மீட்பு பணிகள் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, நேற்று இயந்திரத்தில் ஏற்பட்ட தொடர் கோளாறு காரணமாக, கைகளால் துளையிடும் “எலி துளையிடும் முறை” பின்பற்றப்பட்டது. சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கான்கிரீட் இடிபாடுகளை அகற்றும் பணி முழுதாக முடிந்த பிறகு விரைவில் தொழிலாளர்கள் மீட்கப்படுவர் என நம்பிக்கை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த மீட்பு பணியில் முக்கிய பங்காற்றி வரும் சர்வதேச சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் கூறுகையில், ” முன்பு நாங்கள் சற்று சோர்வாக இருந்தோம். ஆனால, இன்று நான் மகிழ்சயாக இருக்கிறோம். இன்று நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். சுரங்கப்பாதையில் மீட்பு பணிகள் நன்றாக நடைபெற்று வருகிறது. அதனால், நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். சுரங்கம் தோண்டும் பாதையில் இருந்த தடைகள் நமக்கு பல விஷயத்தை கற்பித்துள்ளது.
இன்னும் ஓரிரு மீட்டர் தான் மீதம் உள்ளது. விரைவில் 41 ஆண்களும் மீட்கப்பட்டு அவரவர் வீட்டில் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்படுவர். விரைவில் இந்த அசாதரணமான சூழல் சரிசெய்யப்படும் எனவும் இன்னும் நிறைய விஷயங்களை கூற முடியாது எனவும் சர்வதேச சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
+ There are no comments
Add yours