உலகளாவிய தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதாவது, அமெரிக்காவின் ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி (76 சதவீதம்) தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார்.
அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்’ வருடந்தோறும் தொடர்ச்ச்சியாக உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. பல்வேறு உலக நாடுகளில் இந்த ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு உலகளவில் பிரபலமான தலைவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இந்த பட்டியல் மூலம் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தலைவர்களின் செல்வாக்கு, ஆதரவு எந்தளவுக்கு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். அந்தவகையில், தற்போது உலகளவில் பிரபலமான தலைவர்கள் பட்டியலை அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்’ வெளியிட்டுள்ளது.
இதில், பிரதமர் நரேந்திர மோடி 76% ஒப்புதல் சதவீதத்துடன் சர்வதேச தலைவர்களின் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். இது மிகப் பெரிய எண்ணிக்கையாகும் என்றுள்ளனர். அதன்படி, இந்தியாவின் 76% மக்கள் பிரதமர் மோடியின் தலைமைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், 18% மக்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், 6% பேர் எந்த கருத்து தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு நிறுவனத்தின் முந்தைய கருத்து கணிப்புகளிலும் பிரதமர் மோடி சர்வதேச அளவில் முதலிடத்தில் இருந்து வந்துள்ளார். மேலும், தற்போது வெளியாகியுள்ள உலகளாவிய தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடியை தொடர்ந்து, மெக்சிகோ ஜனாதிபதி அண்ட்ரெஸ் மானுவெல் (66%) இரண்டாவது இடத்திலும், சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட் (58%) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இவர்களை தொடர்ந்து, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (49%), ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (47%) ஆகியோர் முதல் 5 இடங்களை பிடித்துள்ளனர். இதுபோன்று, அமெரிக்க அதிபர் பைடன் 40% ஆதரவுடன் 8வது இடத்திலும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் முறையே 13 மற்றும் 17வது இடத்தில் உள்ளனர்.
கடந்த நவ. 29ம் தேதி முதல் டிச. 5ம் தேதி வரை நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த பட்டியல் உருகிவைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 22 சர்வதேச தலைவர்கள் குறித்து இந்த பட்டியலை தயார் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours