எதிர்க்கட்சிகள் ரத்து செய்ய நினைத்தாலும் பாஜக அனுமதிக்காது – அமித் ஷா!

Spread the love

காங்கிரஸ் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரானது என்று குற்றம்சாட்டியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இடஒதுக்கீட்டை எதிர்க்கட்சிகள் ரத்து செய்ய நினைத்தாலும், அதை பாஜக அனுமதிக்காது என்று தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளரும், சிட்டிங் எம்பியுமான மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பேரணியில் உரையாற்றிய அமித் ஷா, “எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டை நீக்க காங்கிரஸ் கட்சி நினைத்தாலும், நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இது மோடியின் உத்தரவாதம்.

காங்கிரஸ் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான கட்சி. மண்டல் கமிஷன் அறிக்கையை காங்கிரஸ் அரசு அமல்படுத்தவில்லை. நாடாளுமன்றத்தில் இடஒதுக்கீடு குறித்த விவாதத்தின் போது, ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி அதற்கு எதிராக இரண்டரை மணி நேரம் பேசினார்” என்று அவர் கூறினார்.

மேலும், “பிற்படுத்தப்பட்ட ஆணையத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரம் வழங்க பிரதமர் மோடி கடுமையாக உழைத்தார். நாட்டில் உள்ள அனைத்து மத்திய நிறுவனங்களிலும் ஓபிசிகளுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க நாங்கள் உழைத்தோம். உலகம் முழுவதும் நாட்டின் மீது மரியாதையை அதிகரிக்க காரணமான பிரதமர் மோடி, ஓபிசி சமூகத்தை சேர்ந்தவர்தான்.

மோடி அரசாங்கத்திற்கு முன்பு, பொற்கொல்லர்கள், தையல்காரர்கள், தச்சர்கள் மற்றும் படகு தயாரிப்பாளர்கள் போன்ற சமூகங்களுக்கு நாட்டில் எந்த திட்டமும் இல்லை, ஆனால் பிரதமர் மோடி ரூ. 13,000 கோடி செலவழித்து திறன் மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்பு திட்டங்களுடன் இணைத்தார். எனவே இத்தாலியில் மின்சார அதிர்ச்சியை உணரும் வகையில் இவிஎம்-இல் உள்ள தாமரை சின்னத்தின் பொத்தானை அழுத்தவும்” என்று அவர் கூறினார்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours