ஏபிபி – சிவோட்டர் நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பில் நாட்டிலேயே 3-வது பெரிய கட்சியாக திமுக வர வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணிக் கட்சிகளே வெற்றி பெறும் என்று ஏபிபி-சிவோட்டர் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. தமிழகத்தில் திமுக 21, காங்கிரஸ் 9, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, விடுதலை சிறுத்தைக் கட்சி 2 தொகுதிகளிலும், மதிமுக, ஐயுஎம்எல், கொமதேக ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வரும்போது திமுக தலைமையிலான கட்சிகள் 39 இடங்களிலும் வெல்வதற்கான வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும் 18-வது மக்களவையில் 3-வது பெரிய கட்சியாக திமுக வர வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
+ There are no comments
Add yours