ஏழை மக்களின் வளர்ச்சிக்காக செயல்படவேண்டும் !

Spread the love

மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களை தமிழக அரசு மக்களை வஞ்சிக்காமல் முழுமையாக ஏழை மக்களின் வளர்ச்சிக்காக செயல்படவேண்டும் என்று மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கதக்க எரிசக்தி,இராசயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் பகவந்த் குபே தெரிவித்துள்ளார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் நமது லட்சியம், வளர்ச்சி அடைந்த பாரதம் விக்சிட் பாரத் சங்கல்ப் யாத்ரா வாகன விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மூன்று நாள் பயணமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சர் பகவந்த் குபே இன்று தண்டராம்பட்டு வட்டத்தில் உள்ள மளமஞ்சனூர் புதூரில் நடைபெற்ற விக்சிட் பாரத் சங்கல்ப் யாத்ரா வாகன விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு எரிவாயு இணைப்புகளை வழங்கினார்

அப்போது பேசிய அவர் , கிராமப்புற ஏழை மக்களுக்கு அனைத்து திட்டங்களும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது

மத்திய அரசின் திட்டங்களை பெறாமல் விடுபட்டவர்களும் பெறவேண்டும் என்ற வகையில் விக்சிட் பாரத் சங்கல்ப் யாத்ரா வாகனம் கிராமங்கள் தோறும் மக்களை நாடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் 81 கோடி பேர் பயனடைந்துள்ளதாகவும், கடந்த 10 ஆண்டு நரேந்திர மோதி ஆட்சியில் ஏழ்மை நிலையில் இருந்து 32லட்சம் பேர் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும்
தெரிவித்தார்

மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களை தமிழக அரசு மக்களை வஞ்சிக்காமல் முழுமையாக ஏழை மக்களின் வளர்ச்சிக்காக செயல்படவேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பகவந்த் குபே தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மதராஸ் உர நிறுவனத்த்தின் சார்பில் டோரோன் மூலம் திரவ யூரியாக்களை பயிர்களுக்கு தெளிப்பது குறித்து செயல் விளக்கம் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மதராஸ் உர நிறுவன துணை மேலாளர் துளசிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours