‘காசி தமிழ் சங்கமம்-2’ நிகழ்ச்சிக்கு சிறப்பு இரயில்கள்!

Spread the love

கடந்த ஆண்டின் வெற்றிகரமான ’காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, இந்த வருடமும் ஏற்பாடாகி உள்ள ‘காசி தமிழ் சங்கமம்-2’ நிகழ்வுக்கு, சிறப்பு ரயில்கள் தயார் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பண்டைய இந்தியாவின் கலாச்சார மையங்களாக திகழ்ந்த காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே பொதிந்திருக்கும் பிணைப்பை மீட்டெடுக்கும் நோக்கிலும், ’ஒரே பாரதம் உன்னத பாரதம்’ திட்டத்தின் கீழும், கடந்தாண்டு காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வு ஏற்பாடானது. அதன் தொடர்ச்சியாக நடப்பாண்டின் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வு, மார்கழி முதல் நாளான டிச.17 அன்று தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக உத்தரபிரதேசத்தின் வாராணசிக்கு தமிழகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். வாராணசியில் டிச.17 முதல் மாத இறுதி வரை நடைபெறும் ‘காசி தமிழ்ச் சங்கமம்-2’ நிகழ்வினை, கடந்தாண்டு போலவே உத்தரபிரதேச மாநில அரசுடன் இணைந்து மத்திய கல்வி அமைச்சகம் நடத்துகிறது.

இந்த நிகழ்வுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து சுமார் 1,500 பேர் வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தி ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயிலில் பயணப்பட உள்ளனர். சமூகத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் அடுக்குகளை சார்ந்த, அவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக இவர்கள் பல்வேறு குழுக்களாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இன்றுடன்(டிச.8) முடிவடைகிறது. இதனையொட்டி காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான சிறப்பு ரயில் விவரங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி சென்னை, கன்னியாகுமரி, கோயம்புத்தூரில் இருமார்க்கங்களிலும் காசிக்கான சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours