குஜராத்தில் உலகின் மிகப்பெரிய வர்த்தக கட்டிடம்: பிரதமர் மோடி திறப்பு!

Spread the love

உலகின் மிகப்பெரிய வர்த்தக கட்டிடத்தை, குஜராத் மாநிலம் சூரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

நாட்டிலேயே அதிக அளவிலான வைர வியாபாரிகள் உள்ள மாநிலம் குஜராத் ஆகும். இங்கிருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் வைரங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக சூரத் நகரில் ஏராளமான வைர வியாபாரிகள் உள்ளனர். இவர்களை ஒருங்கிணைக்கும் வகையிலும், வைர வியாபாரிகள் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் சூரத் நகரில் வைர பங்குசந்தை என்ற மிகப்பெரிய அலுவலகம் அமைக்கபட்டுள்ளது. சூரத் வைர நகரில் 35 ஏக்கரில் தலா 15 மாடிகளை கொண்ட 9 செவ்வக வடிவ அமைப்புகளாக அலுவலகம் கட்டபட்டுள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய வர்த்தக கட்டிடமான இதனை, இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். ட்ரீம் என்றழைக்கப்படும் டயமண்ட் ரிசர்ச் அண்ட் மெர்கன்டைல் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த நகரம், 66 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது, கிரீன்ஃபீல்ட் திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 700 ஏக்கர் பரப்பளவில் ஒரு டவுன்ஷிப்பாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்பது 15 அடுக்கு கட்டிடங்கள், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கோபுரங்கள் மற்றும் 300 சதுர அடி வரையிலான அலுவலகங்கள் உள்ளன.

சூரத் டயமண்ட் போர்ஸ் ஒவ்வொன்றும் 300 சதுர அடி முதல் 7,500 சதுர அடி வரையிலான சுமார் 4,200 அலுவலகங்களைக் கொண்டுள்ளது. ஒன்பது கோபுரங்கள் உள்ள நிலையில் ஒவ்வொன்றும் தரை மற்றும் 15 தளங்களைக் கொண்டுள்ளது.

முன்னதாக, சூரத் சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட முனையக் கட்டிடத்தையும் பிரதமர் திறந்து வைத்தார். குஜராத் மாநிலத்தின் உள்ளூர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையம், பீக் ஹவர் எனப்படும் பரபரப்பான நேரத்தில் 1,200 உள்நாட்டு பயணிகளையும், 600 சர்வதேச பயணிகளையும் கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours