மேற்குவங்க மாநிலம் அசன்சோல் அருகே உள்ள குல்தி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், அசன்சோல் மாவட்டத்தில் உள்ள பாஸ்சிம் பர்தமானில் உள்ள குல்டி ரயில் நிலையத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக தீயை கட்டுப்படுத்தி, தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.
தீ விபத்து எதனால் ஏற்பட்டது, அதனால் ஏற்பட்ட சேதத்தின் அளவு மற்றும் சம்பவத்தின் விளைவாக ஏதேனும் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் ஏற்பட்டதா என்பது தற்போது தெரியவில்லை. தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி விபத்துக்கான காரணத்தை தெரிவிப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours