கேரளாவில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென குண்டு வெடித்ததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்ரபை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு மற்றும் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குண்டு வெடிப்பா அல்லது வேறு வகையான விபத்தா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
குண்டு வெடித்த பின்பு, தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. இது தொடர்பாக இணையத்தில் வெளியான காட்சிகளில் அனைவரும் அலறி ஆங்காங்கே ஓடிகிறார்கள்.
காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகவும், தகவலறிந்த பின், தீயணைப்பு மீட்புக் குழுவினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை தவிர படுத்தினர். மேலும், குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்று களமசேரி காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், என்ன மாதிரியான குண்டுகள் என்பது குறித்து 4 பேர் கொண்ட என்ஐஏ குழு உள்ளூர் போலீசாருடன் விசாரணை நடத்த சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு கூடுதல் விவரங்கள் தெரியவரும்.
ஒருவர் உயிரிழந்து, இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதை உறுதி செய்த கேரள முதல்வர் பினராயி விஜயன், இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுவருகிறது என தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours