கேரள பெண்ணுக்கு ஜேஎன்1 வகை தொற்று உறுதி!

Spread the love

கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனாவின் புதிய வகையான ஜேஎன்1 தொற்று உறுதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா தொற்று, உலகம் முழுவதும் பரவி பெரும் உயிர் சேதத்தையும், பொருட் சேதத்தையும் ஏற்படுத்தியது. பல்வேறு நாடுகள் இதன் காரணமாக ஏராளமான பொருளாதார சிக்கல்களையும் எதிர்கொண்டன. இதனிடையே கடந்த சில மாதங்களாக கொரோனா உலகம் முழுவதும் கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

குறிப்பாக இந்தியாவில், வெளிநாடுகளில் இருந்து அதிகம் பேர் வந்து செல்லும் தென் மாநிலங்களில் கொரோனா தொற்று பரவி வருகிறது. கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஐரோப்பிய நாடான லக்சம்பர்கில், சில மாதங்களுக்கு முன்பு கண்டறியப்பட்ட ஜேஎன்1 வகை கொரோனா பிஏ 2.86 வகையின் பிரிவாக திரிபாகும். இப்போது பல்வேறு நாடுகளில் இந்த புதிய வகை கொரோனா பரவி வருகிறது.

இதனால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்த ஜேஎன்1 வகையானது, வேகமாக பரவும் என்பதோடு, நோய் தடுப்பாற்றலையும் ஊடுருவும் என கூறப்பட்டுள்ளதால் கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கை நடைமுறைகளை கடைபிடிக்குமாறு பல்வேறு நாடுகளிலும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடைய திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு கடந்த அக்டோபர் 25ஆம் தேதி சென்ற ஒருவருக்கு அங்கு ஜேஎன்1 வகை தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே நேரம் திருச்சி மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கவில்லை.

இந்நிலையில் கேரளாவில் 79 வயது பெண்ணுக்கு ஜேஎன்1 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காய்ச்சல், இருமல் போன்ற மிதமான அறிகுறிகளுடன் இருந்த அவருக்கு கடந்த மாதம் 18ஆம் தேதி ஆர்டிபிசிஆர் சோதனை மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அவரின் மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதில், ஜேஎன்1 வகை தொற்று கடந்த டிசம்பர் 8ம் தேதி கண்டறியப்பட்டது.

நாட்டில் தற்போது பதிவாகும் கொரோனா பாதிப்புகளை 90 சதவீதம் மிதமானதாகவே உள்ளது. இதற்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது மட்டுமே போதுமானது. கேரளா பெண்ணுக்கு ஜேஎன்1 தொற்று உறுதியான நிலையில், நாட்டில் வேறு எங்கும் இந்த புதிய வகை பாதிப்பு கண்டறியப்படவில்லை என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours