கோவா டூ அயோத்தி…ஏமாந்த மனைவி !

Spread the love

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு முன் அயோத்தி நகரை சுற்றி பார்க்க வேண்டும் என தாயார் விரும்பியதால், கோவாவிற்கு ஹனிமூன் செல்லலாம் என கூறிவிட்டு,

அயோத்திக்கு கூட்டிச் சென்றதால் ஆத்திரமடைந்த மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள போபால் குடும்ப நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது.

இதில், கணவர் தன்னுடைய மனைவியிடம் ஹனிமூனுக்கு கோவா அழைத்து செல்கிறேன் என உறுதி அளித்துவிட்டு, அதற்கு பதிலாக அயோத்தியா மற்றும் வாரணாசி நகரங்களுக்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில், சுற்றுலா சென்று விட்டு ஊர் திரும்பிய போது 10 நாட்களில் மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு திருமணம் நடந்து 5 மாதங்களே ஆன நிலையில், இந்த வழக்கு கவனம் பெற்றுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் அந்த பெண் அளித்துள்ள விவாகரத்து மனுவில்,

என்னுடைய கணவர் ஐ.டி. பிரிவில் வேலை செய்கிறார். நல்ல சம்பளம் தான் வாங்குகிறார். நானும் வேலைக்கு சென்று கைநிறைய சம்பளம் வாங்குகிறேன். இதனால், எங்களுக்கு ஹனிமூனுக்கு வெளிநாடு செல்வது ஒன்றும் பெரிதில்லை.

இப்படி நிதி நெருக்கடி எதுவும் இல்லாதபோது, என் கணவரோ வெளிநாட்டுக்கு ஹனிமூன் அழைத்து செல்ல மறுத்து விட்டார். இந்தியாவிலேயே ஓரிடத்திற்கு செல்லலாம் என்றும், பெற்றோரை கவனிக்க வேண்டும் என்று கூறினார்.

இதனால் நாங்கள் இருவரும் சேர்ந்து பேசி ஹனிமூனுக்கு கோவாவுக்கோ அல்லது தென்னிந்தியாவுக்கோ செல்லலாம் என்றும் முடிவெடுத்தோம்.

ஆனால், என் கணவரோ அயோத்திக்கும், வாரணாசிக்கும் செல்லும் விமானங்களில் முன்பதிவு செய்திருக்கிறார். என்னிடம் அதுபற்றி எதுவும் கூறவில்லை.

ஹனிமூனுக்கு புறப்படும் ஒரு நாளுக்கு முன் பயண திட்ட மாற்றங்களை பற்றி என்னிடம் கூறினார்.

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு முன் அயோத்தி நகரை சுற்றி பார்க்க வேண்டும் என என் கணவரின் தாயார் விரும்பியிருக்கிறார். அதனை என்னிடம் கூறினார்.

அப்போது, நான் எதுவும் கூறவில்லை. வாக்குவாதமும் செய்யவில்லை. திட்டமிட்டபடி அந்த இடங்களுக்கு சென்றோம். புனித தலங்களுக்கு சென்று விட்டு திரும்பி விட்டோம்.

இப்போது எனக்கு என் கணவருடன் வாழ பிடிக்கவில்லை. என்னை விட அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மீது கணவர் அதிக அக்கறை கொண்டிருக்கிறார்

என் உணர்வுகளுக்கு அவர் மதிப்பு கொடுக்கவில்லை. எனவே, எனக்கு என் கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும்” என கோரி போபால் குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் போபால் குடும்ப நீதிமன்றத்தில் தற்போது ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours