“PM-eBus Sewa” என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 700 மின்சார பேருந்துகள் அளிக்கப்பட உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை சமீபத்தில் 10,000 இ-பஸ்கள் மூலம் நகரப் பேருந்து இயக்கத்தை அதிகரிக்க “PM-eBus Sewa” என்ற பேருந்துத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் பல்வேறு மாநிலங்களில் மின்சார பேருந்துகளை இயக்க முடிவு செய்தது. இத்திட்டத்திற்கு ரூ.57,613 கோடி செலவாகும், அதில் ரூ.20,000 கோடியை மத்திய அரசு வழங்கும். இத்திட்டம் 10 ஆண்டுகளுக்கு பஸ் இயக்கத்தை ஆதரிக்கும்.
யூனியன் பிரதேசங்கள், வடகிழக்கு மண்டலம் மற்றும் மலை பிரதேச மாநிலங்களின் அனைத்து தலைநகரங்களும் உட்பட பல பகுதிகளுக்கு இந்த பேருந்து விடப்படும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மூன்று லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களை இந்தத் திட்டம் உள்ளடக்கும். இந்த திட்டத்தின் கீழ் பேருந்து சேவை இல்லாத நகரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பேருந்து சேவையை அதிகரிப்பதோடு அல்லாமல்.. மாநகரப் பேருந்து இயக்கத்தில் சுமார் 10,000 பேருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தத் திட்டம் 45,000 முதல் 55,000 நேரடி வேலைகளை உருவாக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையின் கீழ் தமிழ்நாட்டிற்கும் பேருந்துகள் வழங்கப்பட உள்ளன.
700 பேருந்துகள்: இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 700 மின்சார பேருந்துகள் அளிக்கப்பட உள்ளன. அதன்படி பின்வரும் மாவட்டங்கள் இந்த 700 பேருந்துகளை பெற உள்ளன. PM E-Bus Seva திட்டத்தின் கீழ் பின்வரும் தமிழ்நாடு நகரங்கள் தகுதி பெற்றுள்ளன. 1. கோயம்புத்தூர் – 150 பேருந்துகள் 2. மதுரை – 100 3. திருச்சி – 100 4. திருப்பூர் – 100 5. சேலம் – 100 6. ஈரோடு – 100 7. அம்பத்தூர், ஆவடி, தூத்துக்குடி, திருநெல்வேலி & வேலூர் – தலா 50 பேருந்துகள் மின்சார பேருந்துகள்; ஏற்கனவே தமிழ்நாடு அரசால் கொள்முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள மின்சார பேருந்துகள் தனியார் நிறுவனங்களால் இயக்கப்பட்டு பராமரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மின்சார பேருந்துகள் பொது-தனியார்-கூட்டு மாதிரியின் கீழ் இயக்கப்படும், அதில் ஓட்டுநர்கள் தனியார் நிறுவனத்தால் வழங்கப்படும், நடத்துநர்கள் அரசாங்கத்தால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாநில அரசு ஒரு கிமீ அடிப்படையில் நிர்ணயித்த கட்டணத்தின் அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் A முதல் புள்ளி B வரை மின்சார பேருந்துகளை இயக்கும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. 2026-ம் ஆண்டு முதல் புதிய டீசல் பேருந்துகள் வாங்குவதை நிறுத்தும் யோசனையுடன் தற்போதுள்ள டீசல் பேருந்துகளை எலெக்ட்ரிக் பேருந்துகளாக மாற்றுவதற்கான முயற்சிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. இருப்பினும், திட்டமிட்டபடி மின்சார பேருந்துகளை வாங்குவதற்கான திட்டங்கள் சரியாக நடப்பதை பொறுத்தே இது நடக்கும் என்று தமிழ்நாடு போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
+ There are no comments
Add yours