சகோதரிகளை பயன்படுத்தி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க சதி!

Spread the love

எதிரிகள் எனது இரண்டு சகோதரிகளையும் பயன்படுத்தி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க சதித்திட்டம் தீட்டியுள்ளதாக ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவைத் தேர்தலும் இணைந்து நடத்தப்படுகிறது. சட்டப் பேரவைத் தேர்தலில் அம்மாநில முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, கடப்பா மாவட்டம், புலிவெண்டுலா தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அங்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசியதாவது:

“உங்கள் மகனுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு, அவரது வளர்ப்பு மகன் பவன் கல்யாண், பாஜக, காங்கிரஸ், சார்பு நிலை கொண்ட ஊடகங்கள் ஆகியவை ஒன்று சேர்ந்துள்ளன. இவை போதாதென்று எனது இரு சகோதரிகளையும் சதித்திட்டத்தில் இணைத்துள்ளனர்.

சொத்துகளை குவிப்பதற்காகவோ அல்லது எனது குடும்பத்தினரை கோடீஸ்வரர்களாக்கவோ நான் முதல்வர் பதவியை ஏற்கவில்லை. மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்தவே கடவுள் எனக்கு இந்த பதவியை வழங்கியுள்ளார். முதலமைச்சரான பிறகு தங்களைப் புறக்கணித்தேன் என சொல்லும் என் குடும்பத்தாருக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்” என்றார்.

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரும், ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.சர்மிளா ரெட்டி, கடப்பா மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக ஷர்மிளாவின் சித்தப்பாவும், மறைந்த முன்னாள் அமைச்சருமான ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டியின் மகள் சுனிதா ரெட்டி செயல்பட்டு வருகிறார்.

ஷர்மிளா, சுனிதா ஆகிய இருவரையும் குறிப்பிட்டே தனது சகோதரிகளை தனக்கு எதிராக எதிரிகள் களமிறக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours