சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் யுஜிசியின் புதிய ஏற்பாடு!

Spread the love

உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறையினை நடைமுறைப்படுத்துவதில் யுஜிசி முன்வைத்திருக்கும் புதியஏற்பாடு சர்ச்சைக்கு ஆளாகி வருகிறது.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதில் எஸ்சிஎஸ்டி மற்றும் ஓபிசிபிரிவினரில் தகுதியானவர்கள் கிடைக்காதபோதுஅந்த இடத்தை ரத்து செய்துவிட்டு பொதுப்பிரிவினரைக்கொண்டு அதனை நிரப்ப பல்கலைக்கழக மானியக்குழு முன்வந்திருக்கிறதுஉயர்கல்வி நிறுவனங்களில்இடஒதுக்கீடு முறையினை ஒழிப்பதற்கான உத்தி என பொதுவெளியில் கடும் கண்டனம் எழுந்து வருகிறது.

இடஒதுக்கீடு அடிப்படையிலான பணியிடங்களை நிரப்புவதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் பல்வேறுவழிகாட்டுதல்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளனஅவற்றிலிருந்து விடுபட்டதாக யுஜிசியின் வரைவு விதிமுன்வைக்கும் ஏற்பாடுகள் இட ஒதுக்கீடுக்கு எதிரானது என்றும்இடஒதுக்கீடு முறையை முற்றிலும் ஒழிப்பதற்கானஉத்தி என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மத்திய அரசின் பணிவாய்ப்புகளில் இடஒதுக்கீடு நடைமுறைகள் என்பது கடந்த 75 ஆண்டுகளாக எஸ்சி., எஸ்டிபிரிவினருக்கும் கடந்த 33 ஆண்டுகளாக ஓபிசி பிரிவினருக்கும் நடைமுறையில் இருப்பதாகும்ஆனபோதும்தேசத்தின் உயரிய கல்வி நிறுவனங்களான ஐஐடி மற்றும் ஐஐஎம் ஆகியவற்றில் அவை இன்னமும் ஒற்றைஇலக்கத்தில் இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் சுட்டிக்காட்டி உள்ளனர்

இந்த சூழலில் நிர்வாக நடைமுறைகளின் பெயரில் இடஒதுக்கீடு முறைக்கு எதிரானதாக யுஜிசியின் வரைவு விதிசர்ச்சைக்கு ஆளாகி உள்ளதுமக்களவைத் தேர்தல் நெருக்கத்தில் இந்த அறிவிப்பின் பின்னணியில் உள்ள அரசியல்மற்றும் அது தொடர்பான ஆதாயம்சேதாரம் குறித்த அலசல்கள் பொதுவெளியில் அதிகரித்துள்ளன.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours