கடந்த 9-ஆம் தேதி சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகள் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில், தெலுங்கானாவில், காங்., எம்.பி., ராகுல், பொதுச்செயலாளர் பிரியங்கா உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, ராகுல்காந்தி, ஜக்தியால் என்ற இடத்தில் பேரணியாக சென்று அங்கு உரையாற்றினார்.
தெலுங்கானாவில் ஆட்சி அமைந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.! ராகுல்காந்தி உறுதி.!
அப்போது பேசிய அவர், காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் விளையும் ஒவ்வொரு பயிருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை விட, ரூ.500 கூடுதலாக கிடைக்கும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானா உட்பட இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்றும், தெலுங்கானாவில் முதல்வர் கே.சி.ஆர் குடும்பம் எவ்வளவு கொள்ளையடித்திருக்கிறது என்பது சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் தெரிந்துவிடும் என்றும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, தெலங்கானா கரீம்நகரில் சாலையோர கடையில் ராகுல் காந்தி தோசை சுட்டு பிரசாரம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலதளத்தில் வைரலாகி வருகிறது.
+ There are no comments
Add yours