2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நாட்டில் 91 ஆயிரத்து 287 கி.மீ. நீளத்துக்கு தேசிய நெடுஞ்சாலை இருந்துள்ளது. அதன்பிறகு கடந்த ஆண்டு நிலவரப்படி ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 145 கி.மீட்டராக தேசிய நெடுஞ்சாலையின் நீளம் அதிகரித்து உள்ளது. இது 60 சதவீத அதிகரிப்பு ஆகும். இதன்மூலம் உலகிலேயே 2-வது அதிக நீள தேசிய நெடுஞ்சாலை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது.
நாட்டில் தற்போது 1,46,145 கி.மீ. தேசிய நெடுஞ்சாலையும், 1,79,535 கி.மீ. நீளத்துக்கு மாநில நெடுஞ்சாலைகளும், 63,45,403 கி.மீ. நீளத்துக்கு பிற சாலைகளுமாக மொத்தம் 66,71,083 கி.மீட்டருக்கு சாலைகள் உள்ளன.
தேசிய நெடுஞ்சாலைகளில் நெடுஞ்சாலைகள் ஆணையம், சாலை போக்குவரத்துத்துறை மற்றும் ஒப்பந்ததாரர்கள் மூலம் கடந்த 2022-2023-ம் ஆண்டில் ரூ.48 ஆயிரத்து 28 கோடி சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இந்த நிதியாண்டில் கடந்த நவம்பர் மாதம்வரை ரூ.36 ஆயிரத்து 377 கோடி வசூலிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த தகவல்களை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், தனது ஆண்டு மதிப்பாய்வில் தெரிவித்துள்ளது.
+ There are no comments
Add yours