செல்போனில் ‘*401#’-க்கு தொடா்பு கொள்ள வேண்டாம்: மத்திய தகவல்தொடா்புத் துறை எச்சரிக்கை!

Spread the love

செல்போனுக்கு வரும் அழைப்புகளை அடையாளம் தெரியாத மற்றொரு நபருக்குத் திரும்பிவிடும் வகையில் வரும்மோசடி அழைப்புகள் குறித்து மக்கள் எச்சிரிக்கையாக இருக்குமாறு மத்திய தகவல்தொடா்புத் துறைதெரிவித்துள்ளது.

தொலைத்தொடா்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் வாடிக்கையாளா் சேவை மைய பிரதி அல்லது தொழில்நுட்பபணியாளா் என்ற பெயரில் தொடா்புகொள்ளும் மா்ம நபா்கள்சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் சிம் காா்ட் அல்லதுதொலைத்தொடா்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனா்.

இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய ‘ *401#’- தொடா்ந்து அவா்கள் கூறும் செல்பேன் எண்ணை டயல் செய்யுமாறுகூறுகின்றனா்.

இதைச் செய்வதன் மூலம் வாடிக்கையாளருக்கு வரும் அழைப்புகள்அடையாளம் தெரியாத கைப்பேசி எண்ணுக்குத்திருப்பி அனுப்பப்படுகிறது.

இதைப் பயன்படுத்திமா்ம நபா்கள் மோசடி சம்பவங்களில் ஈடுபடுகின்றனா்.

இந்நிலையில்இது போன்ற மோசடி அழைப்புகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்தியதகவல்தொடா்புத் துறை அறிவுறுத்தியுள்ளது

இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில், ‘எந்த தொலைத்தொடா்பு சேவை வழங்கும் நிறுவனங்களும்தங்களது வாடிக்கையாளா்களைத் தொடா்பு கொண்டு ‘*401#’ எண்ணை டயல் செய்யுமாறு கூறுவது இல்லை

அவ்வாறு டயல் செய்துவரக் கூடிய அழைப்புகள் வேறொரு கைப்பேசி எண்ணுக்குத் திருப்பி அனுப்பப்பட்டால்கைப்பேசி அமைப்பில் அழைப்புகளைத் திருப்பி அனுப்பும் வசதியை உடனடியாக செயலிழக்கச் செய்யவேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours