சேரி மொழியில் என்னாலும் பேச முடியும் என நடிகை குஷ்பு பேசியதற்கு கடும் கண்டனம் எழுந்தது. இந்த நிலையில், அதற்கு நடிகை குஷ்பு விளக்கமளித்துள்ளார்.
‘லியோ’ படத்தில் நடித்த போது நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதற்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனத்தைத் தெரிவித்ததுடன் இனிமேல் மன்சூர் அலிகானுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு மணிப்பூர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று திமுக ஆதரவாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு சேரி மொழியில் தன்னாலும் பேச முடியும் என்று குஷ்பு பதில் அளித்திருந்தார். சேரி மொழி என்று அவர் பயன்படுத்திய சொல்லுக்கு இயக்குநர் பா,ரஞ்சித், நடிகை காயத்ரி ரகுராம் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கு நடிகை குஷ்பு விளக்கமளித்துள்ளார். அதில்,” பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் முன்னணியில் நிற்பேன். பிரெஞ்சு மொழியில் சேரி என்ற சொல்லுக்கு அன்பு என்ற அர்த்தத்திலேயே சேரி என்ற சொல்லைப் பயன்படுத்தினேன்” என விளக்கம் அளித்துள்ளார்.
+ There are no comments
Add yours