ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து சட்ட ரத்து.. உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிப்பு !

Spread the love

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது சட்டம் ரத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்துஸ்து வழங்கிய இந்த சட்டம் 2019ல் நீக்கப்பட்டது. மிகவும் முக்கியமான இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு அரசியல் ரீதியாக அதிக கவனம் பெற்றுள்ளது.

மொத்தமாக இந்த வழக்கில் 3 தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. தலைமை நீதிபதி சந்திரசூட் தன்னுடைய தீர்ப்பு, நீதிபதிகள் ஜே கவாய், சூர்யா காந்த் தீர்ப்பை ஒன்றாக வழங்குகிறார். நீதிபதி சஞ்சய் கிஷான் கவுல் , நீதிபதி சஞ்சீவ் கண்ணா தனி தனியாக தீர்ப்பு வழங்கி உள்ளனர். ஆனால் இவர்கள் இருவருமே.. மற்ற 3 நீதிபதிகளின் தீர்ப்புடன் ஒத்துப்போவதாக அறிவித்துள்ளனர்.

கடந்த 2019ம் வருடம் ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அதேபோல் மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டாக பிரிப்பதாக அறிவித்தது.

மத்திய அரசு முடிவு: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் சட்டசபை ஒப்புதல் இன்றி அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதோடு இல்லாமல் ஜம்மு காஷ்மீர், லடாக் இரண்டும் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன. அங்கே இயல்பு நிலை திரும்பிய பின் யூனியன் பிரதேசங்கள் என்ற நிலை மாற்றப்பட்டு மாநில அதிகாரம் கொடுக்கப்படும். அதன்பின்னர் அங்கே சட்டசபை தேர்தலும் நடத்தப்படும் என்று அமித் ஷா உறுதி அளித்தார்.

உச்ச நீதிமன்ற வழக்கு: 2019 ஆகஸ்ட் மாதம் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் வழங்க உள்ளது. மொத்தமாக 2 கோரிக்கைகளை முன் வைத்து இந்த வழக்கில் பல்வேறு மனுக்கள் போடப்பட்டன.. ஒன்று சட்ட பிரிவு 370 ஐ நீக்கியது தவறு. இரண்டாவதாக.. ஒரு மாநில சட்டசபையின் அனுமதி இன்றி அதை பிரிப்பது, அதை யூனியன் பிரதேசம் ஆக்குவதும் தவறு. இந்த இரண்டையும் மையமாக வைத்து பல்வேறு மனுக்கள் போடப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஆகஸ்ட் 2, 2023 முதல் ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்கத் தொடங்கியது. இந்த வழக்கை 16 நாட்களுக்கு விசாரித்த நீதிமன்றம், செப்டம்பர் மாதம் 5ம் தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த வழக்கில் மனோகர் லால் சர்மா, வி த சிட்டிசன்ஸ், டாக்டர் சாரு வாலி கண்ணா, முகமது அக்பர் லோன, ஹஸ்னாயின் மசூதி, ஷாகீர் ஷபீர், அனுராதா பாஷின் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் அடிப்படையிலேயே வாதங்கள் வைக்கப்பட்டன. 370-வது பிரிவு வழக்கு தீர்ப்பு- ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு- மெகபூபா முப்தி ‘ஹவுஸ் அரெஸ்ட்’! 370-வது பிரிவு வழக்கு தீர்ப்பு- ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு- மெகபூபா முப்தி ‘ஹவுஸ் அரெஸ்ட்’! உச்ச நீதிமன்ற தீர்ப்பு; மனுதாரர்கள் சார்பில் கபில் சிபல், கோபால் சுப்ரமணியம், ராஜீவ் தவான், ஜாபர் ஷா, துஷ்யந்த் தவே உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதனிடையே, மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே, ராகேஷ் திவேதி, வி.கிரி மற்றும் பலர் ஆஜராகினர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளது.

முக்கிய வாதங்கள்: சட்ட பிரிவு 370 விசாரணையின் போது, ​​ பின் வரும் வாதங்கள் எழுப்பப்பட்டன:

பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகுமா?

பிரிவு 370 நிரந்தரமாக இருக்க வேண்டுமா?

ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் செல்லுபடியாகுமா?, ஒரு மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது சரியா? சட்டசபை அனுமதி வேண்டாமா?

ஜூன் 20, 2018 அன்று ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்துவதற்கு முன் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

டிசம்பர் 19, 2018 அன்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு ஜூலை 3, 2019 அன்று நீட்டிக்கப்பட்டது சரியா?
அங்கே எப்போது மீண்டும் சட்டசபை தேர்தல் நடக்கும் என்பது உள்ளிட்ட வாதங்கள், கேள்விகள் வைக்கப்பட்டன.

இந்த வழக்கில்தான் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours