டெல்லி காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா!

Spread the love

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியை கண்டித்து டெல்லி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி, கட்சியிலிருந்து விலகுவதாக கடிதம் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, தற்போது இந்தியா கூட்டணியில் ஒரு அங்கமாக இணைந்திருக்கிறது. இது பல்வேறு தரப்பு காங்கிரஸ் கட்சி தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக டெல்லி மாநிலத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் போட்டியிடும் என தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

வருகிற மே 25ம் தேதி டெல்லி மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி, தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், ’டெல்லி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போலியான மற்றும் தகவமைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆம் ஆத்மி கட்சி துவங்கப்பட்டது. துரதிஷ்டவசமாக அந்த கட்சியுடன் தான் தற்போது காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. தேர்தலுக்காக ஆம் ஆத்மி கட்சி சாதனைகள் செய்துவிட்டதாக காங்கிரஸ் வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் முந்தைய முதலமைச்சர் ஷீலா தீக்சித் ஆட்சியின் போது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், இன்று மோசமான நிலையில் உள்ளது. எனவே கட்சியில் இருந்து விலகுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

அர்விந்தர் சிங் லவ்லியின் இந்த திடீர் முடிவு காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜ்குமார் சவுகான் கட்சியிலிருந்து விலகி இருந்தார். அர்விந்தர் சிங் லவ்லி, ஷீலா தீக்சித் ஆட்சியின் போது அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours