பாஜக தலைவர் போல் செயல்படுவதால் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை தேநீர் விருந்தை புதுச்சேரி மாநில திமுக புறக்கணிக்க உள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.
புதுவை அரசு சார்பில் குடியரசு தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.
புதுவை கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் கவர்னர் தமிழிசை தேசிய கொடியேற்றுகிறார்.
தொடர்ந்து மாலையில் ராஜ் நிவாசில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்களுக்கு, கவர்னர் தமிழிசை தேநீர் விருந்து அளிக்கிறார்.
இந்த நிலையில்,பாஜக தலைவர் போல் செயல்படுவதால் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை தேநீர் விருந்தை புதுச்சேரி மாநில திமுக புறக்கணிக்க உள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.
இத தொடர்பாக சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்களில் மாநிலத்தின் தலைமை நிர்வாகி என்ற முறையில் துணைநிலை ஆளுநர் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து தேநீர் விருந்து அளிப்பது என்பது மரபு.
அந்த மரபின் அடிப்படையில் கடந்த காலங்களில் நடைபெற்ற தேநீர் விருந்துகளில் நானும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்று உள்ளோம்.
ஆனால் சமீபகாலமாக புதுச்சேரி ஆளுநர் மாளிகை என்பது பாஜக கொடி கட்டாத அலுவலகமாகவும், ஆளுநர் தமிழிசை பாஜக தலைவர்போலும் செயல்படுகிறார்.
இச்செயல் அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல என்று நாங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டியும், அவர் தன் நிலையில் இருந்து மாறாமல் இருந்து வருகிறார்.
ஆகவே, துணைநிலை ஆளுநர் தமிழிசை விடுத்துள்ள குடியரசு தின விழா தேநீர் விருந்து அழைப்பை புதுச்சேரி மாநில திமுக புறக்கணிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
குடியரசு தின விழா:
இந்திய அரசியலமைப்பு சட்டம் ஜனவரி 26, 1950 ஆம் ஆண்டு நடைமுறைக்கு அமல்படுத்தப்பட்டதில்லிருந்து,
நம் நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க நாட்களில் ஒன்றாக குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
75 வது குடியரசு வெள்ளி கிழமை தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், புதுடெல்லியின் ஜன்பாத்தில் கண்கவர் அணிவகுப்பு நடைபெற உள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தேசியக் கொடி ஏற்றி முழு உற்சாகத்துடனும் கொண்டாடப்பட இருக்கிறது.
+ There are no comments
Add yours