திடீரென உயர்ந்த பூண்டின் விலை !

Spread the love

சென்னையில் ஒரு கிலோ பூண்டின் விலை 500 ரூபாயை தொட்டுள்ளதால்பொதுமக்கள் கடும்அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சைவமோஅசைவமோ இரண்டு வகை சமையலுக்கும் அத்தியாவசியமாகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் என்றால்பூண்டுவெங்காயம்தக்காளி இவற்றைச் சொல்லலாம்அதே நேரம் இவை மூன்றும் எப்போது வேண்டுமானாலும்விலை ஏறி பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்க கூடியவையாக இருக்கின்றன.

கடந்த ஆண்டு ஒரு சில இடங்களில் பெய்த கனமழை காரணமாகவும்ஒரு சில இடங்களில் ஏற்பட்ட வறட்சிகாரணமாகவும்தக்காளி விலை கடுமையாக உயர்ந்ததுதக்காளி பயிரிட்டு கோடீஸ்வரர் ஆனவர்கள்தக்காளிவயலில் சிசிடிவி கேமராதக்காளி வயலுக்குக் காவல் போட்டது என விலையேற்றம் நாட்டில் அதிர்ச்சியைஏற்படுத்தியது

இந்த ஆண்டு தொடக்கத்திலேயே பூண்டின் விலை அதிகரித்துள்ளதுஅதிலும் இன்று ஒரு கிலோ பூண்டின் விலை500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் குடும்பத் தலைவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்வரத்துக் குறைவால்கடந்த சில நாட்களாக 400 முதல் 450 ரூபாய்க்கு விற்பனையான பூண்டு விலை இன்று ஒரே நாளில் 50 ரூபாய்உயர்ந்து 500 ரூபாயை எட்டியுள்ளது.

மேலும் இஞ்சி 105 ரூபாய்ஊட்டி கேரட் 80 ரூபாய்அவரைக்காய் முப்பது ரூபாய்பச்சை மிளகாய் 30, தக்காளி 30 ரூபாய்சின்ன வெங்காயம் 30 ரூபாய்பீன்ஸ் 30 ரூபாய்ஊட்டி பீட்ரூட் 50 ரூபாய்வெங்காயம் கிலோ 20 ரூபாய்முள்ளங்கி இருபது ரூபாய் மற்றும் வெண்டைக்காய் 35 ரூபாய்க்கு விற்பனையாகிறது


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours