திருப்பதியில் ஜனவரி மாத காணிக்கை !

Spread the love

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதம் மட்டும் சுமார் 116.46 கோடி காணிக்கை செலுத்தப்பட்டு உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

உலக பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெரும்பாலான பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப நடைபாதை வழியாக திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்வது வழக்கம்.

தினம்தோறும் ஏரளமான பக்தர்கள் நம்பிக்கையுடன் தங்கள் வாழ்வில் சிறக்க வேண்டும் என்று திருப்தி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வரக்கூடிய பக்தர்கள் இலவச தரிசனத்தில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க பல கோரிக்கைகள் வைக்கப்பட்டு
வருகிறது .

இருப்பினும் ஏழை எளிய மக்கள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

டோக்கன்கள் மற்றும் ஆன்லைனில் வழங்கப்பட்ட ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் ஏப்ரல் மாத தரிசனத்துக்கான ரூ.300 கட்டண ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நடந்து முடிந்துள்ளது.

இதற்கிடையில் திருப்பதி மலைப்பாதையில் செல்லும் பக்தர்கள் அங்குள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதியில் சாமி கும்பிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்து செல்வது வழக்கம்.

இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருந்ததால் பக்கதர்கள் பயந்துகொண்டே தரிசனம் செய்து வருகின்றனர்.

இதன்காரணமாக பக்தர்கள் தனியாக செல்லக்கூடாது, குழுவாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து பக்தர்களுக்கும் வனத்துறை சார்பில் மூங்கில் கம்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர 100 படிக்கட்டுகளுக்கு ஒரு போலீசார் மற்றும் வனத்துறையினர் கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தி முகாமிட்டுள்ளனர்.

என்னதான் சிறுத்தைகள் அச்சுறுத்தல் இருந்தாலும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை மட்டும் குறையவே இல்லை . நாளுக்கு நாள் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் 116.46 கோடி காணிக்கையாக செலுத்தப்பட்டு உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

21.09 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாகவும் . 7.05 லட்சம் பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தியும் .

1.03 கோடி லட்டுகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours