தேஜஸ் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி!

Spread the love

கர்நாடகாவில் உள்ள ஹெச்ஏஎல் விமான தளத்திற்கு சென்ற பிரதமர் மோடி இன்று தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்தார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தை ஆக்கிரமித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்ஏஎல்) தளத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது விமானங்களின் உற்பத்தியை உள்ளடக்கிய ஹெச்ஏஎல்-லின் உற்பத்தி நிலையம் பற்றிய அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதன் பின் தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார்.

இதுத் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தனது பயணம் குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்த பயணம் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அதில், ‘’தேஜஸ் விமானத்தில் ஒரு பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு செழுமைப்படுத்தியது, நமது நாட்டின் பூர்வீக திறன்கள் மீதான எனது நம்பிக்கையை கணிசமாக உயர்த்தியது. மேலும் நமது தேசிய திறனைப் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு அளித்தது’’ என குறிப்பிட்டுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours