தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் !

Spread the love

உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில், 56 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்கள்:

உத்தரப்பிரதேசம் 10, பீகார், மகாராஷ்டிராவில் தலா 6, மத்திய பிரதேசம், மேற்குவங்கத்தில் தலா 5, குஜராத், கர்நாடகாவில் தலா 4, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான்

மற்றும் ஒடிசாவில் தலா 3, உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் தலா 1 என மொத்தம் 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

எனவே, இந்த 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

வேட்புமனு தாக்கல் :

தேர்தல் ஆணையத்தின் கடிதத்தின்படி, வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 8ம் தேதி தொடங்கும். மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 15 கடைசி நாளாகும்.

வேட்புமனு வாபஸ் :

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெறும்.மேலும், வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் பிப்ரவரி 20-ம் தேதியாகும்.

வாக்குப்பதிவு:

பிப்ரவரி 27ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவும், அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பணியில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது இந்தியாவின் 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவிக்காலம் முடிவடையும் எம்.பி.க்கள் லிஸ்ட்:

13 மாநிலங்களை சேர்ந்த 50 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகின்ற ஏப்ரல் 2ம் தேதி முடிவடைகிறது.

மேலும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைய உள்ள ராஜ்யசபா எம்.பி.க்களில் 9 மத்திய அமைச்சர்கள் உள்ளனர்.

இதில், பாஜக தலைவர் ஜேபி நட்டா (ஹிமாச்சலப் பிரதேசம்), ரயில்வே, ஐடி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் (ஒடிசா), ஐடி இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் (கர்நாடகா),

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானே (மஹாராஷ்டிரா), கல்வி அமைச்சர் தர்மேந்திரா ஆகியோர் அடங்குவர்.

பிரதான் (மத்திய பிரதேசம்), சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா (குஜராத்) மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் (ராஜஸ்தான்) இதில் இடம்பெற்றுள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours