இந்தியாவில் நடந்த ரயில் விபத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்க திமுக எம்.பி டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 6 மாதத்தில் 2 பெரிய ரயில் விபத்துக்கள் இந்தியாவில்ஏற்பட்டுள்ளன. ஒடிசா ரயில் விபத்தை சிபிஐ அமைப்பும், ஆந்திரா விஜயநகரம் ரயில் விபத்தை விசாரணை குழுவும் விசாரித்து வருகிறது.
இந்த ரயில் விபத்துக்களால், பொதுமக்களுக்கும், ரயில்வே துறைக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்ற ரயில்வே விசாரணை குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு திமுக எம்பி கடிதம் எழுதியுள்ளார்.
+ There are no comments
Add yours