மீட்புப்பணிகள் நிருத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தின் தற்போதய வீடியோ காட்சிகள்
உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில், சுரங்கப்பாதை ஒன்றின் கட்டுமானப் பணியின்போது நவ.12 அன்று அதன் ஒரு பகுதி இடிந்து விழுந்த விபத்தில், 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். ஒரு வாரத்துக்கும் மேலாக தொடரும் மீட்புப் பணிகள், அன்றாடம் 24 மணி நேரமும் தொடர்ந்து வந்தது.
சுரங்கப்பாதையில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களுக்குத் தேவையான ஆக்சிஜன், உணவு, நீர், மருந்துகள், உளவியல் மருத்துவ ஆலோசனைகள் உள்ளிட்டவை பிரத்யேகமாய் துளையிடப்பட்ட குழாய்கள் வாயிலாக வழங்கப்பட்டு வந்தது.
தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் உட்பட ஐந்துக்கும் மேலான முகமைகள் இந்த மீட்பு போராட்டதில் கைகோர்த்துள்ளன. இவர்களுடன் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ-ம் இணைந்து .
அதற்கான மிகப்பெரும் துளையிடும் எந்திரங்களும் அங்கே விரைந்துள்ளது. அவற்றின் எடை காரணமாக, அவற்றை விமானத்தில் எடுத்துச்செல்ல முடியாது. எனவே. உரிய சாலை வசதிகள் அற்ற வனாந்திரப் பகுதிக்கு கனரக துளையிடும் நவீன எந்திரங்கள் பெரும் சவாலுக்கு இடையே அங்கே கொண்டு செல்லப்பட்டது. இவற்றின் மத்தியில்தான், ரோபாட்டுகளும் மீட்புப் பணியில் இணைந்துள்ளது. தற்போது அங்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீட்புப்பணிகள் நிருத்தி வைக்கப்பட்டுள்ளது !
+ There are no comments
Add yours