நள்ளிரவு தொடங்கி அடுத்தடுத்து நிலநடுக்கம்!

Spread the love

அருணாசலப் பிரதேசத்தில் இன்று நள்ளிரவு தொடங்கி அடுத்தடுத்து 2 மணி நேர இடைவெளியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த மாதம் 3-ம் தேதி காலை 10 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் பாங்கின் பகுதியில் இருந்து வடக்கே 975 கி.மீ தூரத்தில் 60 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

அதன் அச்சத்தில் இருந்து மக்கள் விடுபடாத நிலையில், மீண்டும் இன்று காலையில் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அருணாசலப் பிரதேசத்தின் மேற்கு காமெங் நகரில் இன்று அதிகாலை 1.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகி உள்ளது. இந்நில நடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதனை நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 2 மணி நேரத்திற்குள் மீண்டும் மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது. அதிகாலை 3.40 மணியளவில் கிழக்கு காமெங் பகுதியில் 2-வது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

பொதுமக்கள் தூங்கி கொண்டிருக்கும்போது ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தை மக்களால் உணர முடியவில்லை என்ற போதிலும் நிலநடுக்க அறிவியல் மையம் இதனை உறுதி செய்துள்ளது. மக்களால் உணர முடியாத நிலையில் பாதிப்பு எவ்வளவு இருக்கும் என்கிற விவரங்கள் இன்னும் தெரிய வரவில்லை. அதனால் பாதிப்பு பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இன்று காலைக்குப் பிறகு பிற்பகலில் தான் பாதிப்பு மற்றும் சேதம் குறித்த முழு விவரங்கள் தெரியவரும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours