நாகர்கோவிலுக்கு அல்ட்ரா டீலக்ஸ் ..!

Spread the love

ரூ.17 கோடியில் பிஆர்டிசிக்கு புதிய பேருந்து கள் பெங்களூருவில் தயாராகி வருகின்றன. புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம்(பிஆர்டிசி) சார்பில் புதுச்சேரியில் இருந்து காரைக்கால், வேளாங்கண்ணி, குமுளி, மாஹே, நாகர்கோவில், சென்னை, பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், காரைக்காலில் இருந்து சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதி களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தவிர, புதுச்சேரி, காரைக்கால்,மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ளூர் பேருந்துகள் இயங்கப்பட்டு வருகின்றன.

பிஆர்டிசியில் மொத்தம் 138 பேருந்துகள் உள்ளன. இதில் 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருந்து வந்த 22 பேருந்துகளின் சேவை கடந்த ஆண்டு மே 1-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டன. தற்போது 70 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே பிஆர்டிசி சார்பில் ரூ.17 கோடியில் புதிதாக 38 பேருந்துகள் வாங்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். தொடர்ந்து, புதிய பேருந்துகள் வாங்குவதற்கு டெண்டர் அறிவிக்கப்பட்டது.

தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்த நிலையில், தற்போது 38 பேருந்துகளும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. பெங்களூருவில் பேருந்துகளுக்கு பாடி கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 20 பேருந்துகளுக்கான இப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பேருந்துகளின் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பேருந்துகளுக்கு எந்த வண்ணத்தில் பெயிண்ட் அடிப்பது என்று முடிவு செய்வதற்காக போக்குவரத்து துறை செயலருக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் முடிவு செய்யும் வண்ணத்தில் பேருந் துகளுக்கு பெயிண்டிங் அடித்து புதுச்சேரிக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய பேருந்துகள் பொங்கல்பண்டிகை முதல் மக்கள் பயன்பாட்டு வரும்எனவும் பிஆர்டிசி உயர் அதிகாரிகள் தரப்பில்தெரிவித்தனர்.

இதுகுறித்து மேலும் அவர்கள் கூறுகையில், பிஆர்டிசி சுமார் 3 மாநிலங்களுக்கு இடையே யான 56 வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குகிறது. தற்போது வாங்கப்படும் 38 புதிய பேருந்துகளில், 42 இருக்கைகள் கொண்ட 6 அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் மாஹே,நாகர்கோவில் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நீண்ட தூர வழித்தடங்களில் பயன்படுத் தப்படும்.

மீதமுள்ள டீலக்ஸ் மற்றும் செமி டீலக்ஸ் பேருந்துகள் புதுச்சேரியில் இருந்து சென்னை, கடலூர், விழுப்புரம் மற்றும் காரைக்கால் ஆகியவழித்தடங்களில் இயக்கப்படும். குறிப்பாக புதுச்சேரியில் இருந்து குமுளிக்கு – 2, திருப்பதிக்கு – 3, பெங்களூருவுக்கு – 2, நாகர்கோவில் – 2, மாஹே – 2, காரைக்காலில் இருந்துசென்னைக்கு – 5, கோயம்புத்தூருக்கு – 2 என 18 புதிய பேருந்துகள் இயங்கப்படும்.

மேலும், புதுச்சேரியில் இருந்து இசிஆர் வழியாக சென்னைக்கு 6 பேருந்துகளும், பைபாஸ் சாலை வழியாக சென்னைக்கு 2 பேருந்துகள் என 8 புதிய பேருந்துகள் இயக்கப்படும். மற்றவை ஸ்பேர் பேருந்துகளாக இருக்கும். முதற்கட்டமாக பொங்கல் பண்டிகைக்கு 5 பேருந்துகள் கொண்டுவரப்பட்டு இயக்கப் படவுள்ளன. இதில் 2 பேருந்துகள் மாஹே வுக்கு இயக்கப்படும்.

முதற்கட்டமாக வரும் பேருந்துகளின் நிலையை பார்த்து ஒப்புதல் அளித்த பிறகு மீதமுள்ள பேருந்துகளை புதுச்சேரிக்கு தனியார் நிறுவனம் அனுப்பி வைக்கும். இந்த புதிய பேருந்துகள் அனைத் தும் பயன்பாட்டுக்கு வரும்போது, சென்னை, காரைக்கால், மாஹே செல்லும் பயணிகளின் சிரமம் குறையும். என்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours