தமிழகத்தில் சட்டபேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்.
இதில், தமிழகத்தில் 6 கோடியே 26 இலட்சத்து 74 ஆயிரம் வாக்காளர்கள் இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 6 கோடியே 26 இலட்சத்து 74 ஆயிரம் வாக்காளர்களில், ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 8 இலட்சத்து 38 ஆயிரத்து 473 என்றும், பெண் வாக்காளர்கள் 3.18 கோடி என்றும், 7,246 மூன்றாம் பாலின வாக்காளர்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண் வாக்காளர்களைவிட பெண்வாக்காளர்களே அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் மட்டும் 6,94,845 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பாக கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தில் சிறப்பு வாக்காளர்கள் முகாம் நடத்தப்பட்டது. இதில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, பழைய வாக்காளர்கள் பெயர் நீக்கம், திருத்தம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட வாரியாக தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இறுதி வாக்காளர்கள் பட்டியலை வெளியிட்டனர்.
+ There are no comments
Add yours