ரயில்வே நிர்வாகத்தின் கீழ் 8 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது நாடு முழுவதும்இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கையில் 20 சதவீதம் என்பது கவனிக்கத்தக்கது. இதில் வடக்கு – மேற்கு மண்டலத்தை இணைக்கும் வகையில் சென்னை சென்ட்ரல் – கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகடந்த ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.
தினசரி காலை 6 மணிக்கு கோவை ஜங்ஷனில் புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நண்பகல் 11.50 மணிக்குசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு கோவை ஜங்ஷன் சென்றடைகிறது. மொத்தமுள்ள 495 கிலோமீட்டர்தூரத்தை 5 மணி 50 நிமிடங்களில் கடந்து விடும். வாரத்தில் புதன்கிழமை தவிர்த்து எஞ்சிய 6 நாட்களும்இயக்கப்படுகிறது.
கோவை – சென்னை மார்க்கத்தில் டிக்கெட் முன்பதிவு நிலவரம் குறித்து ஐஆர்சிடிசி இணையதளத்தை எடுத்துபார்த்தால் மார்ச் 7, 8 ஆகிய தேதிகளில் டிக்கெட்கள் இருக்கின்றன. அதன்பிறகு மார்ச் 12ஆம் தேதியில் இருந்துடிக்கெட்கள் இருக்கின்றன. இடைப்பட்ட நாட்களில் வெயிட்டிங் லிஸ்டில் சென்று கொண்டிருக்கிறது. அதுவேசென்னை – கோவை மார்க்கத்தில் மார்ச் 10ஆம் தேதி வரை டிக்கெட்கள் வெயிட்டிங் லிஸ்டில் உள்ளன.
மேலும் மார்ச் 22, 23 ஆகிய நாட்களிலும் வெயிட்டிங் லிஸ்ட் வந்துவிட்டது. எஞ்சிய நாட்களில் டிக்கெட்கள்இருக்கின்றன. இந்த சூழலில் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது, கோவை – சென்னை வழித்தடத்தில் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. மார்ச் மாதத்தில் இரண்டு நாட்களுக்குமட்டும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவை மார்ச் 5, 12 ஆகிய நாட்கள்.
சென்னை சென்ட்ரல் – கோவை மார்க்கத்தில் மட்டும் இயக்கப்படுகிறது. காலை 7.10 மணிக்கு சென்னையில்புறப்படும் 06035 என்ற எண் கொண்ட சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பிற்பகல் 2.15 மணிக்கு கோவையைசென்றடைகிறது. ஐஆர்சிடிசி அளித்த தகவல்களின்படி சென்னையில் இருந்து கோவை செல்வதற்கு வந்தே பாரத்எக்ஸ்பிரஸில் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவது தெரியவருகிறது.
+ There are no comments
Add yours