பல ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்னர் மீண்டும் ராமர் வந்துவிட்டார் – பிரதமர் மோடி!

Spread the love

ராமர் கோயில் திறப்பு விழாவின்போது அங்கு கூடியிருக்கும் பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடையே உரையாற்றிய மோடி, நம் அனைவரையும் ராமர் மன்னிப்பார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக பேசினார்.

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் இன்று காலை 12.40 மணியளவில் நடைபெற்றது. 11 நாட்கள் விரதம் இருந்து கோயிலுக்கு வந்த பிரதமர் மோடி ராமர் சிலை பிரதிஷ்டை பூஜைகளை செய்தார். பின்னர் குழந்தை ராமர் சிலையை பக்தர்களுக்கு அர்ப்பணித்து வைத்தார். அதன் பின்னர் குழந்தை ராமருக்கு உரிய முதல் பூஜைகளை அவர் செய்து முடித்தார். அவருடன் இணைந்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பூஜைகளை செய்தார்.

அதன் பின்னர் ராமர் கோயிலில் கூடியிருந்த பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “பல ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்னர் இன்று மீண்டும் ராமர் வந்து விட்டார். நாடு முழுவதும் இன்று தீபாவளி போல கொண்டாடப்பட்டு வருகிறது. இது நமக்கு கிடைக்க தியாகம் செய்தவர்கள் ஏராளமானவர்கள். இனி கூடாரத்தில் ராமர் வசிக்க வேண்டிய நிலை இனி இல்லை.

கோயில் கட்டுவதற்கு இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டதற்காக ராமர் நம்மை மன்னிப்பார். இந்திய வரலாற்றில் புதிய சகாப்தத்தின் விடியல் இன்று. பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் பகவான் ராமர் தனது வீட்டிற்கு திரும்பி உள்ளார். இந்த அற்புதமான நாளில் இந்தியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ராமர் கோயில் திறப்பு விழாவை பார்த்து ரசித்த நாம் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள்.

இந்த நாள் புதிய காலச்சக்கரத்தின் தொடக்கம். இந்த தருணத்தில் நாட்டின் நீதித்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் மக்கள் இந்த நாளை நினைவு கூர்ந்து மகிழ்ச்சி அடைவார்கள். அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியிருப்பது கண்ணியமாக கிடைத்த வெற்றி. இந்திய மக்களின் மனசாட்சியாக ராமர் கோயில் இருக்கும். இந்தியாவின் அடிப்படையே ராமர் தான். ராம் என்பது இந்தியாவின் கொள்கை, இந்தியாவின் அடிப்படை, இந்தியாவின் சிந்தனை.

ராமர் கோயில் கட்டப்பட்டால் நாடு பற்றி எரியும் என்று சில பிரச்சாரம் செய்தனர். ஆனால் ராமர் கோயில் கட்டியதால் இந்தியா பற்றி எரியவில்லை. இந்தியாவுக்கு ஆற்றல் தான் கிடைத்துள்ளது. ராமர் கோயில் அமைதியின் அடையாளம், இந்திய மக்களை ஒருங்கிணைக்க கூடியது. இக்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் இருக்கக்கூடியவர்” என்று பிரதமர் மோடி பேசினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours