கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது குடும்பத்தினருடன் தனிப்பட்ட பயணமாக துபாய் சென்றுள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது குடும்பத்தினருடன் தனிப்பட்ட பயணமாக இன்று காலை துபாய் புறப்பட்டுச் சென்றார். கொச்சி நெடும்பசேரி விமான நிலையத்தில் இருந்து அவர் விமானம் மூலம் துபாய் சென்றார். முதல்வருடன் அவரது மகள் வீணா விஜயன், மருமகனும் அமைச்சருமான முகமது ரியாஸ், பேரன் ஆகியோர் உடன் சென்றனர்.
துபாயில் முதல்வர் பினராயி விஜயன் 15 நாட்கள் தங்கியிருந்து தனது மகன் மற்றும் குடும்பத்தினரை சந்திக்க உள்ளார். இந்த பயணத்தைத் தொடர்ந்து மற்ற நாடுகளுக்கு அவர் செல்வாரா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
ரியாஸ், வீணா இருவரும் துபாய் தவிர இந்தோனேஷியா மற்றும் சிங்கப்பூருக்கு செல்ல உள்ளனர். ரியாஸுக்கு 19 நாட்களுக்கு பயண அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேரள அரசு வழக்கமாக முதல்வரின் அதிகாரபூர்வ பயணத் தகவல்களை செய்தி குறிப்பாக வெளியிடும்.
ஆனால், முதல்வரின் தற்போதைய பயணம் தனிப்பட்டது என்பதால், இது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. துபாய் பயணத்தை முன்னிட்டு, பொது நிகழ்ச்சிகள் அனைத்தையும் முதல்வர் பினராயி விஜயன் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours