ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் நாளை காலை 9.10 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 8.10 மணிக்கு தொடங்கியது.
இதில், பொருத்தப்பட்டுள்ள எக்ஸ்போசாட்' என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்படுகிறது. விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான
நெபுலா’ உள்ளிட்டவற்றை ஆராய உள்ளது. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.
இதுதவிர காலநிலைபற்றி ஆய்வு செய்வதற்காக, திருவனந்தபுரத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவிகள் தயாரித்த `வெசாட்’ என்ற செயற்கைகோளும் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட்டில் வெளிநாடுகளை சேர்ந்த மேலும் 10 செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட உள்ளது.
+ There are no comments
Add yours