பெங்களூருவில் குடைசாய்ந்து விழுந்த மொபைல் டவர்; தப்பி உயிர் பிழைத்த 11 பேர்!

Spread the love

பெங்களூரு புறநகர் பகுதியில், மொபைல் டவர் ஒன்று அதனை சுமந்த கட்டிடத்தோடு குடைசாய்ந்து விழுந்தது. கட்டிடத்தில் இருந்தவர்கள் கடைசி நேரத்தில் வெளியேற்றப்பட்டதில் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.

அன்றாடங்களில் நம்மால் சற்றும் தவிர்க்க முடியாத மொபைல் போனின் மறுபக்கம் மோசமானது. மொபைல் போனில் வெளியாகும் கதிர்வீச்சு மனித மூளையைத் தாக்கி புற்றுநோய்க்கு வித்திடுவதாக மருத்துவ எச்சரிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.

ஒற்றை மொபைல் போனின் கதிர்வீச்சே அச்சுறுத்தும்போது, அவற்றை ஒருங்கிணைக்கும் மொபைல் டவர் குறித்தான எச்சரிக்கை டவர் உயரத்தை விட பல மடங்கு அதிகரித்து வருகிறது. கதிர்வீச்சு தாக்குதலுக்கு அப்பால் அச்சுறுத்தும் அதன் பிரம்மாண்ட தோற்றமும், அதன் பின்னணியிலான அசம்பாவிதங்களும் கூடுதல் பதற்றத்தை விதைப்பவை.

பெங்களூரு புறநகரில் நேற்று நிகழ்ந்த மொபைல் டவர் அசம்பாவிதம் ஒன்று, அங்குள்ளோரை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. பார்வதிநகர் பகுதியில் கட்டிடம் ஒன்றின் மீது நிறுத்தப்பட்டிருந்த மொபைல் டவர், திடீரென அடியோடு குடை சாய்ந்து கீழே வீழ்ந்தது. அப்போது தன்னை தாங்கி வந்த குறுகிய கட்டிடத்தையும் சேர்ந்துக்கொண்டு மொபைல் டவர் சாய்ந்தது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி காண்போரை பதைபதைக்கச் செய்கிறது.

அருகிலிருந்த கட்டிடம் அகற்றப்பட்டதை அடுத்து மொபைல் டவர் ஆட்டம் காண ஆரம்பித்தது. அது லேசாக சாய்வு காணும்போதே, அப்பகுதியில் உள்ளவர்கள் சுதாரித்து அனைவரையும் எச்சரிக்க ஆரம்பித்தனர். அப்பகுதியை கடப்பவர்கள், அருகில் வேடிக்கை பார்ப்போர் என அனைவரையும் பொதுமக்களே எச்சரித்து அப்புறப்படுத்தினர்.

முக்கியமாக மொபைல் டவர் நிற்கும் கட்டிடத்தின் உள்ளே குடியிருக்கும் நபர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதன் மூலம் அதில் வசித்த 11 நபர்களும் உயிர் பிழைத்தனர். இவை உட்பட பொதுமக்களின் ஜாக்கிரை உணர்வு மற்றும் ஏற்பாடு காரணமாக, மொபைல் டவர் சாய்ந்த விபத்தில் எவரும் காயமின்றி தப்பினர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours