சமூக வலைதள வளா்ச்சி, சமூகத்தில் அதிகரித்துள்ள சகிப்பின்மை ஆகியவை மக்களைப் பிளவுபடுத்தியுள்ளது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தாா்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், இன்றைய உலகில் வலது, இடது, நடுநிலை என பல்வேறு கருத்தியல் ரீதியாக மக்கள் பிளவுபட்டு காணப்படுகின்றனா். இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.
சமூகவலை்தள வளா்ச்சி, சமூகத்தில் சகிப்பின்மை அதிகரித்து இத்தகைய பிளவுபடுத்தலுக்கு வழிவகுத்துள்ளது என்றார். ஒரு குறிப்பிட்ட கருத்து சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்ந்து பரப்பப்படுவதால் மக்கள் மனதில் அது பதிந்து விடுகிறது.
அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராயாமல் பெரும்பாலான மக்கள் அதை ஏற்கின்றனர். இந்தியா உட்பட பல நாடுகள் 75 ஆண்டுகளுக்கு முன்பு காலனிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றன. ஆனால், அவற்றில் பெரும்பாலான நாடுகள் சுயஆட்சியைத் தக்க வைப்பதில் தோல்வியைத் தழுவின. ஆனால், இந்தியா ஜனநாயகத்தை தொடா்ந்து தக்க வைத்து வருகிறது. சமுதாயம் தழைத்திருக்கப் பொதுப்பணி மிகவும் முக்கியமானது.
ஆனால், அதை ஏற்கும்போது பல்வேறு சவால்களையும் தடைகளையும் எதிா்கொள்ள வேண்டியிருப்பதால், சிலா் மட்டுமே முழு மனதுடன் பொதுப்பணியை ஏற்றுக்கொண்டுள்ளனா். பிறா் கூற வருவதைக் காது கொடுத்து கேட்பது வாழ்க்கையில் முக்கியமான ஒன்று. இதனால், கருத்துகளைக் கூற பிறருக்குப் போதிய இடம் அளிக்கப்படுகிறது.
பிறா் கூறுவதைக் கேட்காமல், நம்முடைய கருத்துகளை மட்டுமே கூறும் வழக்கம் சமூகத்தில் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது உள்ளது. பிறா் கூறுவதைக் கேட்கும் துணிச்சல் மக்களுக்கு வர வேண்டும். இது நம்மைச் சுற்றிய உலகத்தைப் பற்றி புதிய புரிதலை அளிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
+ There are no comments
Add yours