மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு!

Spread the love

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு, உயரடுக்கு பாதுகாப்பாக இஸட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

மத்திய புலனாய்வு அமைப்புகள் வழங்கிய அறிக்கைகளின் அடிப்படையில், கார்கேக்கு சிஆர்பிஎஃப் கமாண்டோக்கள் அடங்கிய இஸட் பிளஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கார்கே உயிருக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக மத்திய உளவு அமைப்புகள், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை சமர்ப்பித்ததை தொடர்ந்து இந்த ஏற்பாடுக்கு உத்தரவாகி உள்ளது.

இசட் பிளஸ் பாதுகாப்பு என்பது எஸ்பிஜி பாதுகாப்புக்குப் பிறகு, அதிக அளவில் அச்சுறுத்தல் உள்ள இந்திய விவிஐபி-க்கு அரசாங்கம் வழங்கும் உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடாகும். இதில் 55 நவீன ஆயுதம் தரித்த படையினர் இடம்பெற்றிருப்பார்கள். சிஆர்பிஎஃப் கமாண்டோக்கள் 24 மணி நேரமும் உடன் இருப்பர். குண்டு துளைக்காத வாகனம் மற்றும் மூன்று ஷிப்டுகளில் பாதுகாப்பு ஆகியவையும் இதில் அடங்கும்.

இந்தியாவில் விஐபிக்களுக்கான பாதுகாப்புகள் இஸட் பிளஸ், இஸட், ஒய் மற்றும் எக்ஸ் என 4 பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. மத்திய புலனாய்வு அமைப்புகளின் அறிக்கை அடிப்படையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படும். காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்திக்கும் இஸட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

எஸ்பிஜி பாதுகாப்பு என்பது, பிரதமர், முன்னாள் பிரதமர் மற்றும் அவரது தனிப்பட்ட குடும்பத்தினருக்கான பாதுகாப்பாக வழங்கப்படுகிறது. 2019-ம் ஆண்டு வரை, சோனியா காந்தி குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு இருந்தது. பின்னர் அது இஸட் பிளஸ் நிலைக்கு குறைக்கப்பட்டது. 1984-ல் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு எஸ்பிஜி எனப்படும் 3 ஆயிரம் பேர் கொண்ட விசேஷ படையினர், பிரதமர் பாதுகாப்புக்கு என உருவாக்கப்பட்டனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours