மார்ச் 20ம் தேதி முதல் கோடை மழைக்கு வாய்ப்பு!

Spread the love

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிக பட்ச வெப்ப நிலை வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரைஅதிகமாக இருக்கக் கூடும்மார்ச் 20 முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ தமிழகம்புதுச்சேரிகாரைக்கால் பகுதிகளில் வரும் 19-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக் கூடும்மார்ச் 20 முதல் 22-ம் தேதிவரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 23ம் தேதி தமிழகம்புதுச்சேரிகாரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும்

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும்நாளையும் அதிக பட்ச வெப்ப நிலை வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரிசெல்சியஸ் வரை அதிகமாக இருக்கக் கூடும்அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்குபோது ஓரிருஇடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்அதிக பட்ச வெப்ப நிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும்குறைந்த பட்ச வெப்ப நிலை 25-26 டிகிரிசெல்சியஸ் அளவை ஒட்டியும் இருக்கக் கூடும்” என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours