மீண்டும் காங்கிரஸில் விஜயசாந்தி ..?

Spread the love

முன்னாள் மேடக் எம்.பி.யும், மூத்த திரைப்பட நடிகையுமான விஜயசாந்தி கட்சி மாற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜயசாந்தி தற்போது பாஜகவில் உள்ளார். ஆனால், பாஜகவில் அவருக்கு உரிய முக்கியத்துவத்தை தரவில்லை என்று கூறப்படுகிறது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கூட அவருக்கு தேர்தல் தொடர்பான எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை எனவும் இதனால் விஜயசாந்தி கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், அதனால் விஜயசாந்தி பாஜக கட்சி நிகழ்ச்சிகளில் இருந்தும் ஒதுங்கி வருகிறார் என கூறப்படுகிறது.

இதற்கிடையில், பாஜகவுக்கு குட்பை சொல்லிவிட்டு விரைவில் காங்கிரஸில் சேரப் போவதாக மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லு ரவி கடந்த சனிக்கிழமை தெரிவித்தார். கட்சி மாற்றம் குறித்த விவரங்களுக்கு பதிலளித்த விஜயசாந்தி, அப்படி எதுவும் இல்லை என்று மெதுவாக மறுத்தார். மல்லு ரவியின் கருத்துக்கு விஜயசாந்தி கண்டனம் தெரிவித்தார். தற்போதைக்கு எந்த கட்சியும் மாறும் எண்ணம் இல்லை என்று கூறினார்.

இன்று தெலுங்கானாவுக்கு மோடி வருவதையொட்டி, அவரை வரவேற்க விமான நிலையத்திற்கு புறப்பட்டதாக அவர் கூறினார். மோடி கலந்து கொள்ள உள்ள கூட்டத்தில் கலந்து கொள்கிறீர்களா..? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் . அந்தக் கேள்விக்கு அவர் இல்லை, வேறொரு கூட்டத்திற்குப் போகிறேன் என்றார். தெலுங்கானா சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று முன்தினம் பிரதமர் மோடி வருகை தந்தார். ஆனால் சமீப காலமாக பாஜக நிகழ்ச்சிகளில் இருந்து விலகி விஜயசாந்தி இருந்ததால் மல்லு ரவியின் கருத்துகள் வலுப்பெற்றுள்ளதாக தெரிகிறது.

விஜயசாந்தி சினிமாவில் நடித்துக் கொண்டே பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார். 1996-ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலின் போது அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அதன்பிறகு, லோக்சபா தேர்தலில் பாஜக-வின் நட்சத்திர பேச்சளார் ஆனார். 1998-ல் பாஜகவில் இணைந்து நேரடி அரசியலில் தனது பயணத்தை தொடங்கினார். கடந்த 2009 ஆம் ஆண்டு அம்மா தெலுங்கானா கட்சி என தனிக்கட்சி தொடங்கினர். பின்னரே அப்போதைய டிஆர்எஸ் (இப்போதைய பிஆர்எஸ்) கட்சியில் இணைந்தார். அதன் பிறகு 2009-ல் மேடக் மக்களவைத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக வெற்றி பெற்றார்.

இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு கேசிஆர் உடனான கருத்து வேறுபாடு காரணமாக விஜயசாந்தி காங்கிரஸில் சேர்ந்தார். இதனைத்தொடர்ந்து, விஜயசாந்தி கடந்த 2020-ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து வெளியேறி மீண்டும் பாஜகவில் இணைந்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours