கங்கை நீரில் மூழ்கடித்தால் புற்றுநோய் குணமாகும் என்ற மூடநம்பிக்கையால் 5 வயது சிறுவனின் உயிர் பறிபோன அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் தான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. புற்றுநோயால் தங்களுடைய மகன் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில்,
சிறுவனை கங்கை நீரில் மூழ்க வைத்தால் புற்றுநோய் குணமாகிவிடும் என்று அச்சிறுவனின் பெற்றோர் நம்பியுள்ளனர்.
இதற்காக ஹரித்துவர்க்கு செல்ல முடிவு செய்த சிறுவனின் பெற்றோர் நேற்று காலை 9 மணி அளவில் டெல்லியில் இருந்து ஹரித்வாருக்கு புறப்பட்டு உள்ளனர்.
அப்போது சிறுவனின் பெற்றோர், சிறுவன் மற்றும் சிறுவனுடைய அத்தை ஆகியோர் காரில் சென்றதாக கூறப்படுகிறது. சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அவரது குடும்பத்தினர் கார் ஓட்டுனரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் டெல்லியில் மருத்துவர்கள் தங்கள் மகனின் உயிரை காப்பாற்றாமல் கைவிட்டதால் கங்கை நதிக்கு செல்வதாக கூறியுள்ளனர். பின்னர், ஹரிதுவார் சென்ற அவர்கள் கங்கை நீரில் 5 வயது சிறுவனை மூழ்கடித்துள்ளனர்.சிறுவனின் பெற்றோர் அருகில் இருந்து பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும்போது சிறுவனின் அத்தை சிறுவனை நீரில் மூழ்கடித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஹரித்வார் நகர காவல்துறைத் தலைவர் ஸ்வந்தந்திர குமார் கூறுகையில்..,
சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள உயர்மட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். இறுதியில் மருத்துவர்கள் தங்கள் குழந்தையை காப்பாற்ற முடியாது என்று கைவிட்ட நிலையில்,
கங்கை நதி சிறுவனை குணப்படுத்தும் என்று குடும்பத்தினர் நம்பி, அவரை இங்கு அழைத்து வந்துள்ளனர்.
நாங்கள் டெல்லி மருத்துவமனையில் இருந்து இதுகுறித்து அறிக்கைகளைப் பெற உள்ளோம் என்று கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours