உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்துள்ளார் நடிகர் ராம் சரண் மனைவி உபாசனா. அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இலவச மருத்துவ சேவையை வழங்குவதற்காக அதிநவீன அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்துள்ளார். இதற்காகவே அவர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்துள்ளார்.
நடிகர் ராம்சரணின் மனைவி உபாசனா, அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச மருத்துவ சேவையை வழங்க உள்ளார். இதற்காக, அதிநவீன அவசர சிகிச்சை மையத்தை அங்கு திறந்து வைத்துள்ளார். இதுத் தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில், ‘ராம் லல்லாவின் ஆசியுடன் அயோத்திக்கு வரும் பக்தர்களுக்காக இலவச அவசர சிகிச்சை மையத்தைத் திறப்பதை அப்பல்லோ அறக்கட்டளை சார்பில் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். தாத்தாவின் விஷனில் நம்பிக்கை வைத்த முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி’ எனக் கூறியுள்ளார்.
மேலும், உத்தரப் பிரதேசத்தில் 300 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட உள்ளதாக உபாசனா கூறியுள்ளார். இதயம், கல்லீரல், சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான உரிமம் பெற்ற லக்னோவில் உள்ள ஒரே தனியார் மருத்துவமனை இது என்பது குறிப்பிடத்தக்கது.
அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட்டது. இந்த விழாவிற்கு பல பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் கலந்து கொண்டவர்களில் நடிகர் ராம்சரணும் ஒருவர். அந்த சமயத்தில் அவருடன் மனைவி உபாசனா செல்லவில்லை.
அதற்குப் பதிலாக இப்போது அவர் தனது தாத்தாவான அப்பல்லோ நிறுவனர் மற்றும் தலைவர் பிரதாப் சி ரெட்டி மற்றும் பாட்டி சுசரிதா ரெட்டி ஆகியோர் உடன் அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்றுள்ளார். அங்கு தனது அனுபவத்தை வீடியோவாகப் பகிர்ந்து ’கனவு மெய்ப்பட்டது’ என்று கூறியுள்ளார்.ள்ளார் நடிகர் ராம் சரண் மனைவி உபாசனா. அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இலவச மருத்துவ சேவையை வழங்குவதற்காக அதிநவீன அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்துள்ளார். இதற்காகவே அவர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்துள்ளார்.
நடிகர் ராம்சரணின் மனைவி உபாசனா, அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச மருத்துவ சேவையை வழங்க உள்ளார். இதற்காக, அதிநவீன அவசர சிகிச்சை மையத்தை அங்கு திறந்து வைத்துள்ளார். இதுத் தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில், ‘ராம் லல்லாவின் ஆசியுடன் அயோத்திக்கு வரும் பக்தர்களுக்காக இலவச அவசர சிகிச்சை மையத்தைத் திறப்பதை அப்பல்லோ அறக்கட்டளை சார்பில் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். தாத்தாவின் விஷனில் நம்பிக்கை வைத்த முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி’ எனக் கூறியுள்ளார்.
மேலும், உத்தரப் பிரதேசத்தில் 300 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட உள்ளதாக உபாசனா கூறியுள்ளார். இதயம், கல்லீரல், சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான உரிமம் பெற்ற லக்னோவில் உள்ள ஒரே தனியார் மருத்துவமனை இது என்பது குறிப்பிடத்தக்கது.
அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட்டது. இந்த விழாவிற்கு பல பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் கலந்து கொண்டவர்களில் நடிகர் ராம்சரணும் ஒருவர். அந்த சமயத்தில் அவருடன் மனைவி உபாசனா செல்லவில்லை.
அதற்குப் பதிலாக இப்போது அவர் தனது தாத்தாவான அப்பல்லோ நிறுவனர் மற்றும் தலைவர் பிரதாப் சி ரெட்டி மற்றும் பாட்டி சுசரிதா ரெட்டி ஆகியோர் உடன் அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்றுள்ளார். அங்கு தனது அனுபவத்தை வீடியோவாகப் பகிர்ந்து ’கனவு மெய்ப்பட்டது’ என்று கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours