ராணுவ வீரர்கள் சென்ற ரயில் விபத்து!

Spread the love

பீகாரில் ராணுவ வீரர்கள் சென்ற ரயில் பெட்டிகளின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் விபத்து ஏற்பட்டது. இந்த ரயிலில் ராணுவ தளவாடப்பொருட்களும் இருந்துள்ளன.

பீகாரில் ராணுவ வீரர்கள் சென்ற ரயில் பெட்டிகளின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் விபத்து ஏற்பட்டது. வீரர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ராஜஸ்தானில் இருந்து மேற்குவங்க மாநிலம் சிலிகுரிக்கு சிறப்பு ரயில் மூலம் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டது.

பீகார் மாநிலம் கோரக்பூர் நர்கதியாகஞ்ச் இடையே உள்ள பகாஹா ரயில் நிலையத்திற்கு ரயில் சென்று கொண்டிருந்த போது, திடீரென ரயில் பெட்டிகளின் இணைப்பு ஒரு இடத்தில் துண்டித்தது. அதனால் முன்னாள் சென்ற இன்ஜினுடன் இணைக்கப்பட்ட பெட்டிகள் தனியாக சென்றன. மற்ற இணைப்பு பெட்டிகள் பாதி வழியில் நின்றது. தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள், உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து முன்னாள் ஓடிக் கொண்டிருந்த ரயிலை நிறுத்தினர்.

இதுகுறித்து மேற்கு சப்பரன் கலெக்டர் தினேஷ் குமார் ராய் கூறுகையில், ”விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ரயில்வே அதிகாரிகள் மீட்புப் பணியை துரிதப்படுத்தி உள்ளனர். அதிர்ஷ்டவசமாக ராணுவ வீரர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். தண்டவாளத்தை மேம்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு பின்னர், இந்த வழித்தடத்தில் விரைவில் ரயில்கள் இயக்கப்பட்டன” என்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours