டெல்லியில் வரும் 31-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 9-ம் தேதி வரை நடக்கிறது. பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது . இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. இது ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவார்.
அதை தொடர்ந்து, பிப்ரவரி 1ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.
பின்னர், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் உள்ளிட்ட அலுவல்கள் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: 7-வது மக்களவையின் கடைசி கூட்டத் தொடரான இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர்ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது.
இந்த கூட்டத் தொடரின் முதல்நாளில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுவார். பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார். பிப்ரவரி 9-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும். இவ்வாறு பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இடைக்கால பட்ஜெட் என்பதால் மிகப்பெரிய அறிவிப்புகள் இருக்காது. எனினும் இந்த பட்ஜெட்டில் பெண்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக பெண் விவசாயிகளுக்கான நிதியுதவி ரூ.6,000-ல்இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் தற்போது ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.
இந்தகாப்பீட்டுத் தொகை உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. நாடாளுமன்றம் 3 முறை ஓராண்டில் கூடுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர்(parliament budget session) தொடங்கி நடைபெறும் . அதனை தொடர்ந்து ஜூலை மாதத்தில் மழைக்கால கூட்டத்தொடர்நடைபெறும். அதன் பிறகு நவம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறுகின்றன.
+ There are no comments
Add yours